அத்தியாயம் 1
அத்தியாயம் 1
     நம்மீது மட்டுமே பிரியம் கொண்டவர்களை வருத்துவது எளிது. ''என்னை disturb பண்ணாதே'' என்று சொன்னாலே போதும்.
''என்னை தயவு செய்து disturb பண்ணாதே'' என்று அவள் சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

"யட்சிகள் இப்படித்தான்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு accelerator இன்னும் கொஞ்சம் மிதித்தான். இன்னும் 274Km போக வேண்டி இருந்தது. அந்தத் தொலை தூரப் பயணத்தில் அவனும் அவளும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர்.

     நேற்று இரவு அவளுக்கு  இவன் மேலிருந்த அன்போ பாசமோ தெரியவில்லை, இன்று அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் கண்ணை மூடிக்கொண்டிருந்தாள். அந்தத் நீண்ட நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனமோ, மனித நடமாட்டமோ இருக்கவில்லை. இடைக்கிடையே சில சாலை விளக்குகளும், சில மிருகங்களும் மட்டுமே கண்ணுக்கு தென்பட்டன.

"london எனக்கு குளிர்கிறது அதைக் கொஞ்சம் குறையுங்களேன்" என்றாள்.
அவன் அதற்குப் பதிலேதும் சொல்லாமல் A/C ஐக் குறைத்தான்.
இரவு 12.30 ஐத் தாண்டி இருந்தது.

        இவளுடைய இந்த மாற்றம் அவனை ஒரு பக்கம் கவலைக்கும் இன்னொரு பக்கமும் கோவத்துக்கும் இழுத்துக் கொண்டிருந்தது.
"jamie,  மய்று இப்ப உனக்கு என்ன problem" என்று கேட்டன்.
அதற்கு அவள் பதில் எதுவுமே சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டே இருந்தால்.
மீண்டும் "என்னனு சொல்லுடி" என்றன் அவன்.
"Look, don't disturb me" என்றாள் அவள்.

        அவனுக்கு கோவம் இன்னும் அதிகரித்தது, பொறுத்துக்கொண்டே "seat belt ஐ போடு jaime" என்றான்.
அதற்கும் அவள் பதில் கொடுக்கவில்லை.
"மய்று" என்று உரக்கச் சொல்லிவிட்டு, அவனே seat belt ஐ போட்டு விட்டான்.
போடும் போது அவளுடைய கையில் அவள் வெட்டிய தழும்புகளையும் கவனித்தான், அதை கவலையுடன் தொட்டான். அவள் கையை உதறிவிடாள்.

அவன் "ஹ்ஹஹ்ம்ம்" என்றவாரே accelerator ஐ இன்னும் மிதித்தான். பாதையில் எதுவுமே இல்லாததால் காரின் வேகத்துக்கு எதுவுமே இடைஞ்சலாக இருக்கவில்லை.
"இப்ப ஏன் இவளவு speed?" என்று கண்ணை மூடிக்கொண்டே அவள் கேட்டதற்கு, அவன் "நான் உன்னை disturb பண்ணலையே" என்றான்.

         அந்த நிலவில்லா இருளில் இவனுடைய காரின் head light மட்டுமே வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தது, ஆங்காங்கே இருந்த சாலை விளக்குகளின் வெளிச்சமும் ஏதோ கொஞ்சம் உதவத்தான் செய்தது.
ஏதோ ஒரு அவசரத்தில் இன்றே புறப்படுவோம் என்று புறப்பட்ட பயணம் தான் இது.

        அவள் கண்களை மட்டும்தான் மூடிக்கொண்டிருந்தலே தவிர அவள் தூங்கவில்லை.
இந்த தனித்த பயணத்தில் எங்காவது ஒரு  hotel இல் தங்கிவிட்டு நாளை காலை பயணத்தை துவங்குவோம் என்று யோசித்த போதும், அந்த காடுகள் மட்டுமே நிறைந்த பாதையில் ஒரு  வீட்டைக் கூட காண முடியவில்லை.

      தனித்த பயணம் என்பதால், முன்னர் படங்களில் பார்த்த ஏதேதோ விடயங்கள் அவனுடைய நினைவுக்கு வந்தான.
அதற்கு அவன் பயப்படவில்லை என்றாலும், மனைவியும் இருப்பதால் எப்படியாவது சீக்கிரமாக ஏதாவது hotel ஒன்றுக்கு போய் தங்கி நாளை பயணத்தை துவங்கும் எண்ணத்தில் இன்னும் வேகத்தை கூட்டினான்.

     அவள் அவனுடன் அதிகம் வாதடுவாள், பின்னர் அதிகம் இறக்கம் கொள்வாள். அப்போது அவளுக்கு 23 வயதுதான் ஆகி இருந்தது.
தன்னுடைய வாரிசை சுமக்கப் போகின்ற அவள் மீது அவன் அளவில்லா ஆசைகளைக் கொண்டிருந்தான்.

       ஏதோ எல்லாம் யோசித்துக்கொண்டேதான் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

      ஏதோ ஒரு வெள்ளை மனித உருவம் பாதையில் திடிரென கையை நீட்டுவதுவது போல இருந்தது. பயந்து திடுக்கிட்டு break ஐ அழுத்தினான். அவன் seat belt போட்டிருக்கவில்லை. திடிரென அழுத்தப்பட்ட break இன் காரணமாக அவனுடைய முகம் steering இல் அடிபட்டது. தன மனைவியை இடக்கையால் பிடித்துகொண்டான், அவளும் பயந்து போய் கத்தினாள்.
கார் நிறுத்தப்பட்டது.. அவனுடைய முகத்தில் இரண்டு இடங்களில் ரத்தம் வந்து கொண்டிருந்தது, அவள் பதரிப்போனாள்.

     அவன் பயத்துடன் பின்னே திரும்பிப் பார்த்தான் ஒரு பெண் அழுது சத்தம் போட்டுக் கொண்டு இவர்களை அழைத்தால் "தயவு செய்து கொஞ்சம் உதவுங்கள்" என்று மட்டுமே கூறிக்கொண்டிருந்தால். பதை ஓரத்தில் ஒரு கார் ஒரு மரத்தில் மோதி இருந்தது.
அவன் என்ன செய்வதென்று அரியது தடமாறினான். சீக்கிரம் போவோம் என்று காரை மீண்டும் start பண்ணினான்...
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 5».
Коментарі