Книги
Всі
Вірші
Всі
நீ எனக்கு மட்டுமேதான்
ஒரு நாள் நீ உன்னைச் சொன்னாய், உன் காதலைச் சொன்னாய்,
உன் காமத்தை,
உன் தேடலை,
உன் ஆசையை,
உன் எதிர்பார்ப்பை,
உன் ஏமாற்றத்தை,
உன் தோல்வியை,
உன் வெற்றியை
மற்றும் உன் தனிமையை.
மாபெரும் மௌனத்தின் கரையில் நிற்கின்றோம்.
உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்
உன் முகத்தைத் தாண்டி,
உன் உடலைத் தாண்டி,
உனக்குள்ளே மிதந்து கொண்டிருக்கும்
உருவமே இல்லாத உன் உயிரிடம் இதைச் சொல்ல வேண்டும்.
"நீ எனக்கு மட்டுமேதான்"
0
0
456