அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 9
   அவன் செய்த சத்தியத்தில் எந்தப் பொய்யும் இருக்கவில்லை, அவன் உண்மையைத்தான் சொன்னான், அந்தச் சமயத்தில் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்கவில்லை. அதற்குப் பிறகு அவன் அவளுடன் மிக இறுக்கமான இணைப்பில் இணைந்து கொண்டான். அவளை அடைந்தும் கொண்டான்.
பின்னாளில் "நீ சத்தியத்தை மீறியவன்" என்று சொல்லப்பட்டது. அது எப்படி சாத்தியம்?
அவனிடம் கேட்கப்பட்டதற்கு அவன் சத்தியம் செய்தான். பின்னாளில் நடந்த எதற்கும் அந்தச் சத்தியத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அது அவளுக்கும் நன்றாகவே தெரிந்துதான் இருந்தது. அவள் மீதான அவனின் மோகம் எல்லையற்றது, பல யுகங்களை ஒரு நொடியில் தருவித்தது.
அந்த மோக வேட்டையில் அவளை அவன் முழுமையாக அடைந்து கொண்டான், அவளை மணந்து கொண்டான், அவளை முழுமையாக உணர்ந்தும் கொண்டான். ஒவ்வொரு இரவும் அவளுடன் புதிதாய் கதைகளும் கவிதைகளும் புனைந்தான். அந்தக் கதைகளையும் கவிதைகளையும் அந்தந்த இரவுகளிலேயே ஜனனிக்கச் செய்தான்..

அவள் மீது அவன் கொண்ட விருப்பத்தையும் மோகத்தையும் அவளும் உணர்ந்து கொண்டாள், அதை வெளிக்காட்டுவதில் பிரயத்தனம் செய்தாள். பின்னர் வெளிக்காட்டினாள், அவன் அவளை சொட்டுச் சொட்டாக அடைந்து தீர்த்தான். மனம் முடித்தான்....
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 10
Коментарі