அத்தியாயம் 1
"ட்ரிகர் என்னை நோக்கி அழுத்தப்பட்டது, ரத்தம் என் நெஞ்சில்.. தாங்கிக் கொண்டேன்.. என்னைச் சுட்ட பின் நீ நகர்ந்தாய், கண்ணீர் என் கண்களில். உன் நகர்வை தாங்கிக் கொள்ள முடியவில்லை...."
இது ஒரு புதிய அனுபவம் அவனுக்கு...
"ரத்தத்தை துடைத்தேன், கைகளிலும் ரத்தம்.. கன்னீரைத் துடைத்தேன்.. கன்களிலும் ரத்தம்...."
அந்த நள்ளிரவில் அவளிடம் பிஸ்டோல் இருந்ததை அவன் கன்ட போதிலும், நள்ளிரவு உயிரோட்டமாக இருந்ததால் அவன் கன்களுக்கு அவள் மட்டுமே தெரிந்தால்.. அவனுடைய வசனங்களின் வேகம் எல்லையை கடந்தது போலும்... உடனே துக்கம் வருகிறது என்றாள்.
"கொஞ்சம் நில்" என்றான்
“ஏன்”
“கொஞ்சம் நில்”
“தூக்கம் வருகிறது”
“3 நிமிடங்கள் மட்டும் தா”
“எதற்கு??”
நள்ளிரவில் ஒரு நிமிடம் எடுப்பதற்கு கெஞ்சினான்.
இப்படிக் கெஞ்சுவதும் அவனுக்கு புதிய அனுபவம்தான். அவள் கடைசியில் "ஆம்" என்றாள். மூன்று நிமிடங்களுக்கு ஒத்துக் கொண்டாள்.மூன்று யுகங்களை அடைந்து கொண்ட பரவசம் அவனுள்ளே.
அந்த மூன்று நிமிடங்களுக்கு முன்னர் ஒரு 10 நிமிட அனுமதியிலேதான் அவளுடன் அவன் கதைத்துக் கொண்டிருந்தான். நிலவு இல்லாத அந்த இரவில் அவளின் முகம் அவனுக்கு மட்டுமே பெரும் ஒளியை இறைத்துக் கொண்டு இருந்தது. அதை அவளும் உணர்ந்தாள் ஆனாலும் அவள் அதைக் காட்டிக்கொள்ளவே இல்லை.
அவனுடைய வார்த்தைகள் அவளை உருக வைத்ததோ என்னவோ
“காய்ச்சல் போல இருக்கிறது” என்றாள் அவள்.
அவன் “ஏன் அப்படி”
அவள் “நான் தூங்க வேன்டும், நாளை காலை எனக்கு அதிக வேலை இருக்கிறது”
அவன் “கொஞ்ச நேரம்??”
அவள் “ உங்களுக்கு தூக்கம் வரவில்லையா”
அவன் “இல்லை” என்றான். .....
துக்கம் வரக்கூடிய இரவா அது?? சில விசயங்களை அவளுடன் உரையாடினான்.
“ போதும், நிறுத்துங்கள்” என்றாள்.
ஒரு முன் கோபக்காரி அவள். அவனுக்கு அவளிடம் அதிகம் பிடித்ததே அந்தக் கோபம்தான். அதை அவளிடம் அவன் ஒரு போதும் கூறியதில்லை.. நள்ளிரவு இருண்டு கொண்டே இருந்தது.
அவள் “10 நிமிடங்கள் முடிந்து விட்டது” என்றாள். 10 செக்கன்கள் மட்டுமே கழிந்த உனர்வு அவனிடம். கடிகாரத்தைப் பார்த்தான். ஆம் 12.40AM . இயற்பியலில் time dilation படித்ததுன்டு, ஆனால் experiment செய்ய சாத்தியமில்லை. ஆனால் இந்த 10 நிமிடத்தில் அவன் time dilation & inverse time dilation இரண்டையும் உணர்ந்தான். இது ஒரு அசாத்தியமான நிலை.. இயற்பியலின் ஒரு புதிய யுகம் போலும். Space இல் ஒளி மறைந்ததால் blank உருவானதன் விளைவோ என எண்ணினான்!! வெளியே எட்டிப் பார்த்தான், இல்லை இருப்பது உலகம்தான்.
மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தான்.. 12.40.13AM. இல்லை இல்லை, இது அவளின் ஈர்ப்பினால் நிகழ்ந்த விளைவுதான் இது என்பதை உணர்ந்து கொண்டான்.. பின்னர் அந்த மூன்று நிமிடங்களில்,
அவன் “ஏன் எனக்கு உன் மேல் இவ்வளவு விருப்பம்” என்று கேட்டான்.
“தெரியவில்லை” என்றாள். ....
அவன் “ஒரு உள்ளார்ந்த உணர்வின், உன்னதமான வெளிப்பாடுதானடீ இது” என்று மனதுக்குள் கூறிக்கொண்டான்.
அந்தத் தருணத்தில் அவனுடை உனர்வுகளின் வேகம் எல்லையை கடந்து கொண்டிருந்தது. இது அசாத்தியமான நிலை அல்ல, சாத்தியமான நிலைதான். அவனுடைய விருப்பத்தின் வெளிப்பாடு அவளுடைய எல்லையை தகர்த்து எரிந்தது...
அவன் “என்னை உனக்கு பிடிக்குமா??”
அவள் “இல்லை” . அந்த “இல்லை” என்பதில் உயிரோட்டமில்லை. மான் வேட்டைக் காரகனுக்கு அது புரியாதா என்ன!!
மீண்டும் அவள் “நான் உனர்வுகள் அற்றவள்”
அவன் “ஏன் அப்படி”
அவள் “அப்படித்தான்”.
அவளுடை சில பதில்களுக் அவன் மீண்டும் கேள்வி கேற்பதில்லை. காரணம், அவனுக்குப் பிடித்த அவளுடைய முன்கோபம் அவனை பல முறை ரத்தம் சிந்த வைத்திருக்கிறது. சிந்திய ரத்தங்களை அவள் மிக அற்பமாகவே என்னி இருந்தால் போலும். ஆனாலும் அவளிடம் மீண்டும் மீண்டும் வருவதை அவன் நிறுத்தி விட்டதில்லை. இனம் புரியாத ஒரு விருப்பம் அவள் மேல் அவனுக்கு.
முன்பு ஒரு இரவில்,
அவள் “என் மனதில் உள்ள அனைத்தையும் உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்" என்றாள். ஆனால் அது சொல்லப் படவில்லை. அந்த நிகழ்வை அவன் அவளிடம் கூறி, “இப்போது என்னிடம் சொல்” என்றான்.
அவள் “எனக்கு நினைவில்லை, நான் உனர்வுகள் அற்றவள்” என்று தடுமாறிக்கொண்டு சொன்னாள்.
அவன் அவளது உணர்வுகளை புரியாமல் இருந்திருந்தால் இவளவு தூரம் அவளுடன் வந்திருக்க மாட்டன். "நான் உனர்வுகள் அற்றவள்" என்ற வார்த்தையில் அவள் உணர்வுகளை கட்டுப்படுத்தினால், அவ்வளவுதான். ஒரு சிரிப்புடன் அவன் "பெண்ணின் மனதை அறிந்தவன் அவளை கொள்ளை கொள்வான்" என்றான்.
அவள் "மூன்று நிமிடங்கள் முடிந்து விட்டது"
அவன் "கொஞ்சம் நில்"
அவள் " நான் தூங்கப் போகிறேன்"
அவன் " ப்ளீஸ், இரண்டு நிமிடங்கள் மட்டும் தா, அவ்வ்வளவு போதும்"
அவள் "முடியாது நான் போகிறேன்"
அந்தத் தருணம் அவன் செய்வதறியாது திகைத்தான், மீண்டும் மீண்டும் கேட்டான்.
அவளுக்கும் அவனுடன் இருப்பதற்கு ஆசை இல்லாமலா என்ன?
ஆசைகளை கட்டுப்படுத்தினாள், அவளுடைய மனம் சொல்கிற எதையுமே அவளுடைய வாய் சொல்லவில்லை. அவளுடைய இவ்வாறன பதில்களுக்கு காரணம் இருக்கத்தான் செய்தது.
அவள் ஒரு பிடிவாதக்காரி போலும். மீண்டும் "முடியாது நான் போகிறேன்" என்றாள். அவளை நிறுத்த வேண்டும், அதற்காக ஒரு விடயத்தை சொல்லத் தொடங்கினான். அவளைப் புரிந்து கொண்டவர்கள் குறைவாகத்தான் இருக்க வேண்டும், அதில் இவனும் ஒருவன். ஒரு நிழலை அணைக்க முடயுமா? அனால் அவன் அவளை அனைத்திருக்கிறான். ஒரு நிழலை நகராமல் நிறுத்த முடயுமா? ஆனால் அவன் நிருத்தியிருக்கிறான்.
இவளுடன் அவனுடைய சந்திப்பு ஒரு கிரைம் கதையைப் போன்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

Коментарі
Показати всі коментарі
(1)