அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 2
   phone ஐ மேசையில் வைத்து விட்டு, தண்ணீரை எடுத்து குடித்தான். இன்னும் கொஞ்சம் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஏதேதோ எண்ணங்கள் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அவளையே கண் முன் எடுத்து எடுத்து சிரித்த வண்ணம் கண்களை மூடிக்கொண்டிருந்தான்.

                  ஐந்து மாதங்களுக்கு முன்னர் போடப்பட்ட அந்த  விதை இன்று வளர்ந்து பெரும் விருட்சங்களுடன் நின்று கொண்டிருந்தது.

       அவளுடனான அவனுடைய விருப்பம் எல்லையற்றது என்பதை அவளும் நன்றாகவே உணர்ந்திருந்தாள். அவளுடைய விருப்பங்களையும் அவள் சில சந்தர்ப்பங்களில் பல முறை வெளிப்படுத்தி இருக்கிறாள், அடுத்த நாள் எதுவுமே இல்லாதது போல் பவனை செய்வாள். யாட்சிகள் அப்படித்தானே. அவளுடைய அந்தத் தன்மையைக் கூட அவன் ரசித்தான்.

           அவளுடைய  அனைத்து தன்மைகளையும் புரிந்து ரசித்தவன் அவன் மட்டும்தான். அதையும் அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.

          கண்ணை மூடிக்கொண்டிருந்த அவனுக்கு அவளுடைய முகமும் அடுத்தடுத்த ஒவ்வொன்றும் தவண்டு கொண்டிருந்தன. அவள் மீது அவனுக்கு உருவான காதல், அதன் உச்ச நிலையை தாண்டிய பொழுதுகள் அவை. காதலின் உச்ச நிலை காமம் தானே?. காதலை முழுமைப்படுத்துவதும் காமம் தானே?
அதை நோக்கியே அவனுடைய எண்ணங்கள் பறந்து கொண்டிருந்தன.

        அவளை எப்படியெல்லாம் அவன் ரசித்திருப்பன் என்பதை அவள் உணர்ந்திருக்க மாட்டாள். ஆனால் ருசிப்பதை உணரத்த்னே வேண்டும். அவனுடைய அனைத்து எண்ணமும் அவளை நோக்கியே பயணித்த வண்ணம் இருந்தது.

        அவனைப்பற்றி முழுதும் அறிந்தவள் இவள் மட்டுமேதான், இவனை கேட்டவன் என்று ஒத்துக் கொண்டதும் அவள் மட்டுமேதான். ஏனெனில் இவனுடைய அனைத்து முகமூடிகளும் இவளுக்காக மட்டுமே களையப்பட்டது...
சிலவற்றை அவள் கலைந்தாள், சிலதை களைவதற்கு அவன் அனுமதிதான்...
அவனுடைய காதலின் திரைச் சீலைகளை காமம் கிழித்து எறிந்த தருணங்கள் அவை..
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 3
Коментарі